அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா – 2026இன் இறுதி நாள் வைபவம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை தொழிலதிபர் என்.எஸ்.வாசு மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார்.
இதன்போது நீதியரசர் பா.சசி மகேந்திரன் தலைமையுரையினையும் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த டாக்டர் முஹமட் ரேலா தொடக்கவுரையும் ஆற்றினர்.
இந்நிகழ்வில் கம்பன் கழகம் ஆறு சான்றோர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தொழிலதிபர் சி.தனபாலா, சிரேஷ்ட பொறியியலாளர் சி.உருத்திரலிங்கம், சுற்றுலா அமைச்சின் முன்னாள் நிரந்தர செயலாளர் டாக்டர் பிரதாப் இராமானுஜம், வைத்திய கலாநிதி 'காப்பியக்கோ" ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முல்லைத்தீவு அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சான்றோர் விருது பெறவேண்டிய முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய நிகழ்வுக்கு வருகை தராததால் அவருக்கான விருதை. அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான நவீன் திசாநாயக்க விழா மேடையில் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அகில இலங்கை கம்பன் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் உயரிய விருதான 'கம்பன் புகழ்" விருதினை இவ்வாண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு 'வரலாற்றை மாற்றியவன்!" என்ற புகழாரத்தோடு கழகத்தினர் வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத்தின் முன்னாள் தலைவர் கு. அண்ணாமலையும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM
🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்
📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com
🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.
#NDTVLANKA #NDTVLANKALive #SriLanka #TamilLive #TempleFestivals #SriLankaEvents #LiveStream #KovilThiruvila #TamilNews #HinduFestivals #SportsLive #Jaffna #CulturalEvents #NDTV #lankalive#ValvettithuraiTemple #Jaffna #HinduCulture #LiveStreaming #SpiritualJourney #TempleFestival #SriLankaTemples #LiveBroadcast #HinduFestival #SpiritualLanka #JaffnaFestivals #tamilculture #Mahootsavam2026 #srilankaevents #KambanVizha2026 #KambanKazhagam #TamilLiterature #Kambaramayanam #SriLankaEvents #KambanVizha #TamilCulture #livestream
