அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026 இன் மூன்றாவது நாள் நிகழ்வுகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பழ.புஸ்பநாதன் தம்பதியர் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க கடவுள் வாழ்த்தினை செல்வி வைஷாலி ஆறுமுகம் பாடினார். அதனையடுத்து மதுவப்பன் முத்தையா (தமிழ்நாடு) தலைமை உரை ஆற்றினார். தொழிலதிபர் ஏ.பி.ஜெயராசா தொடக்க உரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர் அரங்கத்தில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவி லக்ஷ்மிதா "நீலமாலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதன் பின்னர் பேச்சாளர் பாரதி பாஸ்கரை (தமிழ்நாடு) நடுவராகக் கொண்ட "சுழலும் சொற்போர்" நடைபெற்றது. "முரண் பாத்திரங்களுள் முதன்மை பாத்திரம்" "கைகேயியே" என சி.கேசவனும், "வாலியே" என அ. வாசுதேவாவும், "இலக்குவனே" என கு. பாலஷண்முகனும், "சுக்கிரீவனே" என ந. விஜயசுந்தரமும், "விபீடணனே" என பரா. ரமேஷும் வாதாடினர்.
மாலை நிகழ்வில் தொழிலதிபர் க.ரவீந்திரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றியதை தொடர்ந்து, யோ. வைஷாலியின் கடவுள் வாழ்த்து பாடப்பட்டதோடு நிகழ்வுகள் ஆரம்பமாயின.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமை உரையினை ஆற்ற, தொடக்கவுரையை தமிழ்நாட்டின் கோவிலூர் ஆதீன முதல்வர் நாராயண ஞானதேசிக சுவாமிகள் வழங்கினார்.
அதன் பின்னர், கவிப்பொழிவுக்காக 'கம்பன் காட்டும் இருள்" என்ற தலைப்பில் கவிஞர் ச.முகுந்தன் நீண்ட கவிதை வாசித்தார்.
அடுத்து கம்பன் கழகத்தால் சமூக நிதி உதவிகள் வழங்கப்பட்டன. அதன்படி, மட்டக்களப்பில் இயங்கி வரும் யோகர் சுவாமி மகளிர் இல்ல நெறியாள்கையாளரான கருணாகரன், பொலன்னறுவையில் அறநெறிப் பாடசாலையை நிர்வகித்து வரும் பாலன் சுதாகரன் ஆகியோருக்கான சமூக நிதி உதவிகளை கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன் வழங்கினார்.
மேலும், வறுமையான சூழ்நிலையில் கல்வியைத் தொடரும் இரு மாணவிகளுக்கான கல்வி நிதியானது அவர்களின் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்பட்டதாக நிகழ்வு வேளையில் அறிவிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கணினித்துறையில் கல்வி பயிலும் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேற்றில், வர்த்தகப் பிரிவில் முதலாம் நிலையில் சித்தியெய்திய மாணவி என இருவருக்கு கல்வி நிதி உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM
🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்
📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com
🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.
#NDTVLANKA #NDTVLANKALive #SriLanka #TamilLive #TempleFestivals #SriLankaEvents #LiveStream #KovilThiruvila #TamilNews #HinduFestivals #SportsLive #Jaffna #CulturalEvents #NDTV #lankalive#ValvettithuraiTemple #Jaffna #HinduCulture #LiveStreaming #SpiritualJourney #TempleFestival #SriLankaTemples #LiveBroadcast #HinduFestival #SpiritualLanka #JaffnaFestivals #tamilculture #Mahootsavam2026 #srilankaevents #KambanVizha2026 #KambanKazhagam #TamilLiterature #Kambaramayanam #SriLankaEvents #KambanVizha #TamilCulture #livestream
