கம்பன் விழா 2026 | அகில இலங்கை கம்பன் கழகம் | Kamban Vizha 2026 | DAY 01

அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் மிக விமரிசையாக நடைபெற்ற "கம்பன் விழா 2026".கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆரம்பமானது.

இலங்கை – இந்திய இலக்கியவாதிகள், கலைஞர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இக்கம்பன் விழாவினை, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவி அபிராமி கைலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைக்க, 'இசைவேந்தன்" மு.தயாபரன் கடவுள் வாழ்த்துப் பாடினார்.

கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவரும் முன்னாள் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியுமான ஜெ. விஸ்வநாதன் தலைமையுரை ஆற்றினார்.

அடுத்து, கொழும்பு கம்பன் கழகத் தலைவர் ஈ.கணேஷ் தெய்வநாயகம் தொடக்கவுரை ஆற்றினார்.

அதன் பின், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் எழுதிய “இராம காதை” வசன நடை நூலின் முதலாம் பாகம் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை தமிழ்நாட்டின் கோவிலூர் மடாலயத்தின் நாராயண ஞானதேசிக சுவாமிகளிடமிருந்து இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் ஐந்து ஆளுமைகளுக்கு அறக்கட்டளை விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கப்பட்டன. பேராதனை பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரனுக்கு 'நாவலர் விருது", மிருதங்க வித்துவான் வை. வேனிலானுக்கு 'விபுலானந்தர் விருது", யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா. பிரதீபராஜாவுக்கு 'நுழைபுலம் ஆய்வு விருது", மூத்த கவிஞர் நாக. சிவசிதம்பரத்துக்கு 'மகரந்தச்சிறகு விருது", ஊடகவியலாளர் நிசாம்தீன் ஹஷாம் முஹம்மதுக்கு 'ஏற்றமிகு இளைஞர் விருது" வழங்கப்பட்டது.

விருதாளர்களுக்கு கழகப் பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன் விருதுக் கேடயங்களையும் ஐஸ்வர்யலக்ஷ்மி ஆலய அறங்காவலர் சபைத் தலைவி மாலா சபாரட்ணம் பொற்கிழிகளையும் வழங்கி கௌரவித்ததைத் தொடர்ந்து, கம்பன் விழாவின் ஆரம்ப நாள் மேடையை அலங்கரித்த விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

எழிலுரைக்கு முன்னிலை வகித்த மலேசிய முன்னாள் அமைச்சர் 'டத்தோஸ்ரீ" எம்.சரவணனின் உரையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் “தாரணிக் கொடையாளன் கம்பன்” என்ற தலைப்பில் எழிலுரை ஆற்றினார்.

எழிலுரையைத் தொடர்ந்து நாட்டிய அரங்கு நடைபெற்றது. 'இராம காதை" நாட்டிய நாடக நிகழ்வுகளில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு கம்பராமாயண காண்டங்களை எடுத்துக்காட்டும் வகையிலான நடனங்கள் மேடையேற்றப்பட்டதோடு, நாட்டியக் குழுவினரின் நடன ஆசிரியர்களான ஷாலினி வாகீஸ்வரன், சுகன்யா நித்தியானந்தன், லக்ஷ்மி ஸ்ரீஹரன், பவானி குகப்பிரியா, பாரதி சிவயோகநாதன், வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM

🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்

📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com

🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.

#NDTVLANKA #NDTVLANKALive #SriLanka #TamilLive #TempleFestivals #SriLankaEvents #LiveStream #KovilThiruvila #TamilNews #HinduFestivals #SportsLive #Jaffna #CulturalEvents #NDTV #lankalive#ValvettithuraiTemple #Jaffna #HinduCulture #LiveStreaming #SpiritualJourney #TempleFestival #SriLankaTemples #LiveBroadcast #HinduFestival #SpiritualLanka #JaffnaFestivals #tamilculture #Mahootsavam2026 #srilankaevents #KambanVizha2026 #KambanKazhagam #TamilLiterature #Kambaramayanam #SriLankaEvents #KambanVizha #TamilCulture #livestream

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles